தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கும்பக்கரை வட்டக்கானல், பாம்பார்புரம் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கவும், பார்வையிடவும் வனத்துறையினர் தடை விதித்தனர். மேலும், அருவியில் நீர்வரத்து சீராகும்வரை தடை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.