ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலையொட்டி, பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தல் வரும் 13 மற்றும் 20 ஆகிய 2 கட்டங்களாக நடைபெறுகிறது. அனைத்து கட்ட வாக்குகளும் வரும் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இதனைதொடர்ந்து பேசிய அவர், ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்துக்கானது மட்டுமல்ல என்றும், ஜார்க்கண்ட் மாநிலத்தின் எதிர்கால நலனுக்கானதாகும் என தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் மாநில மக்கள் ஊழல் ஆட்சி வேண்டுமா அல்லது வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கும் அரசு வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும் எனவும் கூறினார். பாஜக தேர்தல் அறிக்கை இதர பிற்படுத்தப்பட்டோர், பழங்குடிகள், தலித்துகளுக்கான வாக்குறுதிகளை வழங்கி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.