கனடாவில் இந்துக்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோயிலுக்கு வந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் அங்கிருந்த இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பான வீடியோ பதிவை இந்து கனடியன் அறக்கட்டளை அமைப்பினர் வெளியிட்டனர்.
வீடியோ வைரலானதையடுத்து, இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்துக்கள் மீதான தாக்குதலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். கனடாவில் வசிக்கும் மக்களுக்கு தாங்கள் விரும்பும் மத நம்பிக்கைகளை பின்பற்றும் அதிகாரம் உள்ளதென குறிப்பிட்டுள்ள அவர், சம்பவம் குறித்து உடனடி விசாரணையை தொடங்கிய காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.