சென்னைக்கு பேருந்துகள் கிடைக்காமல் தரையிலே அமர்ந்து வந்ததாகவும், சில பேருந்துகள் நிற்காமல் சென்றதாகவும் பயணிகள் குற்றச்சாட்டுகின்றனர்.
தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து 15 லட்சம் பேர் பொது போக்குவரத்து மூலம் சொந்த ஊருக்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தீபாவளி விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு பொதுமக்கள் படையெடுத்தனர்.
இதனால், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அதிகளவில் மக்கள் குவிந்திருந்தனர். குறிப்பாக பேருந்துகளில் சீட் கிடைக்காததால், சொந்த ஊரான அரியலூரில் இருந்து கீழே அமர்ந்து வந்ததாகவும், போதிய பேருந்துகளை இயக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர். பண்டிகை காலங்களில் அதிகளவில் சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என அரசுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், சென்னைக்கு பேருந்து கிடைக்காமல் பல மணி நேரம் பேருந்து நிலையத்தில் காத்து கிடந்ததாகவும், சில பேருந்துகள் நிற்காமல் சென்றதாவும் பெண் பயணி வேதனை தெரிவித்துள்ளார்.