ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை 6 ஆண்டுகளுக்கு பிறகு கூடியது.
ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றிய நிலையில், பெரும்பான்மையுடன் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
அதேபோல, எதிர்க்கட்சி தலைவராக பாஜகவை சேர்ந்த சுனில் ஷர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை இன்று கூடியது.
அப்போது சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட அப்துல் ரஹீமை, முதலமைச்சர் ஒமர் அப்துல்லா மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சுனில் ஷர்மா ஆகியோர் இணைந்து சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர்.
தொடர்ந்து முதல் நாள் அமர்வில் முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் உரை நிகழ்த்தினர்,