அமெரிக்க அதிபர் தேர்தல் : பின்பற்றப்படும் நடைமுறைகள் என்ன ? - சிறப்பு கட்டுரை!
May 21, 2025, 10:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தல் : பின்பற்றப்படும் நடைமுறைகள் என்ன ? – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Nov 4, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர். இருவரில் யார் வெற்றி பெறுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் பின்பற்றப்படும் நடைமுறைகளை சற்று விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்காவில் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறும் என்றாலும் ஒவ்வொரு முறையும் தேர்தல் நடைபெறும் தேதியும், அதிபர் பதவியேற்கும் தேதியும் அரசியலைமைப்புச் சட்டத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.அதன்படி, அமெரிக்காவில் நவம்பர் மாதம் வரும் முதல் செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவும், அதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி புதிய அதிபர் பதவியேற்கும் நிகழ்வும் நடைபெறும்.

தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்குகள் தேசிய அளவில் கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார். மாறாக மக்கள் அளிக்கும் வாக்கு மாநில அளவில் மட்டுமே கணக்கிடப்படும்.

மக்கள் வாக்கு அடிப்படையில், எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களுக்கு வாக்களிப்பார்கள். அவர்கள் தான் அமெரிக்க அதிபரை தேர்வு செய்வார்கள்  அமெரிக்காவின் மக்கள் தொகையை பொறுத்து ஒவ்வொரு மாகாணத்திற்கும் எலக்டோரல் காலேஜ் உறுப்பினர் வாக்குகள் உள்ளன.

அதன்படி நாடாளுமன்றத்தில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அதே எண்ணிக்கையிலான உறுப்பினர்களை எலக்டோரல் காலேஜும் கொண்டிருக்கும்  மக்கள் தொகையை பொறுத்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறிப்பிட்ட எலக்டோரல் காலேஜ் வாக்குகள் இருக்கும் நிலையில் மொத்தமுள்ள 538 வாக்குகளில் 270 வாக்குகளுக்கு மேல் பெறும் வேட்பாளர் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்படுவார்.

மைனே மற்றும் நெப்ராஸ்கா மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் மக்கள் வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர், அந்த மாநிலத்தில் உள்ள எலக்டோரல் காலேஜின் அனைத்து வாக்குகளையும் எடுத்துக் கொள்ளும் வகையில் புதிய விதியும் உள்ளது.

அதனால் தான் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது ஹிலாரி கிளிண்டன் தேசிய அளவில் மக்களின் வாக்குகளை அதிகளவு பெற்றிருந்தாலும் எலக்டோரல் காலேஜ் வாக்குகுளை குறைவாக பெற்றதால் டிரம்பிடம் தோல்வியை தழுவினார். எனவே மாநில அளவில் அதிக வாக்குகளைப் பெற்றாலும் தோல்வியடைவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன.

பெரும்பாலான மாகாணங்கள் ஜனநாயகக் கட்சி அல்லது குடியரசுக் கட்சி ஆகிய இரு கட்சிகளில் ஏதேனும் ஒன்றுக்குத் ஆதரவாக இருந்தாலும் டெக்ஸாஸ், புளோரிடா, ஜார்ஜியா, அரிஜோனா, விஸ்கான்சிங் உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ள எலக்டோரல் காலேஜ் வாக்குகளே அதிபர் தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக திகழ்கின்றன.

ஒருவேளை எலக்டோரல் காலேஜ் வாக்குகளை இரண்டு வேட்பாளர்களுக்கும் சமமாக பெறும் பட்சத்தில் மேலவை உறுப்பினர்களான செனட் உறுப்பினர்களும் வாக்களித்து அதிபரை தேர்ந்தெடுப்பர்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியிலிருந்து 7.30 மணிக்குள்ளாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags: Republican PartyUS presidential electionDemocratic PartyFormer President TrumpVice President Kamala Harris
ShareTweetSendShare
Previous Post

வேலூர் அருகே பேருந்து வசதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மாணவர்கள்!

Next Post

சூளகிரி அருகே விவசாய தோட்டத்தில் கஞ்சா வளர்ப்பு – விவசாயிக்கு போலீஸ் வலைவீச்சு!

Related News

மகாராஷ்டிராவில் கட்டடம் இடிந்து விபத்து – 6 பேர் பலி

மென்பொருள் மூலம் சம்பாதிக்கலாம் என கூறி நூதன மோசடி – பொறியாளர் கைது!

இன்றைய தங்கம் விலை!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை – ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!

வழக்கு பதிவு செய்தால் போதாது, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு முக்கியம் – நியோமேக்ஸ் வழக்கில் நீதிமன்றம் கருத்து!

நாடு முழுவதும் 257 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அன்னூர் அருகே டாஸ்மாக் கடையில் காலி பாட்டிலுக்கு பத்து ரூபாய் தர தாமதம் – ஊழியரை தாக்கியவர் கைது!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

ஜூலை மாதம் முதல் மின் கட்டணம் உயர்வா? – அமைச்சரின் பதில் என்ன?

டெல்லி தனியார் பள்ளியில் தீ விபத்து!

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு தக்க பதிலடி – ராஜ்நாத் சிங் பதிலடி!

இந்தியாவின் சுகாதார திட்ட நடைமுறைகளை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயார் – பிரதமர் மோடி

சிவகங்கை அருகே கல்குவாரி விபத்து – 4 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு – இன்று வெளிநாட்டுக்கு புறப்படுகிறது எம்.பிக்கள் குழு!

திருப்பூரில் சாய ஆலை கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு!

அரக்கோணம் திமுக நிர்வாகி மீதான பாலியல் புகார் – காவல்துறை விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies