கந்த சஷ்டி திருவிழாவின் 4ம் நாளையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் அங்கு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நவம்பர் 2ம் தேதி கந்த சஷ்டி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இந்நிலையில், 4ம் நாளான இன்று அதிகாலை 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
இதில், திரளானோர் பங்கேற்று முருகப் பெருமானை வழிபட்டுச் சென்றனர். மேலும்,விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 7ம் தேதி நடைபெறுகிறது.