அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி குடியரசுக்கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் ஆகியோர் தங்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் உற்சாகமாக வாக்கு சேகரித்தனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், குடியரசுக்கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸும் அதிபர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், பென்சில்வேனியா மாநிலத்தின் பிட்ஸ்பர்க் நகரில், டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் புடைசூழ இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது இருவரும் மக்களிடையே தங்கள் கட்சியின் வாக்குறுதிகளைக் எடுத்துக்கூறி உற்சாகமாக வாக்கு சேகரித்தனர்.