கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
மைக்கேல்புரம் கிராமத்தை சேர்ந்த எமிலி கிளாரா, அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 2ம் தேதி 18 சவரன் தங்கம் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளைடிக்கப்பட்டது.
தொடர்ந்து இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட 2 இளைஞர்களை கைது செய்தனர்.