திருச்சியில் தந்தை மதுபோதைக்கு அடிமையானதால் மன உளைச்சலுக்கு ஆளான மகள், தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
பிராட்டியூர் வடக்கு தெருவை சேர்ந்த ராமசாமி, மதுபோதையில் அடிக்கடி தனது மனைவி மற்றும் மகளிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மது குடிப்பதை நிறுத்த வலியுறுத்தியும் அவர் அதற்கு முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அவரது 17 வயது மகள், தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.