சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள பொதுக்கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
அம்மாபட்டினம் பகுதியில் அமைந்துள்ள சமுதாயக் குடிநீர் கிணற்றின் மூலம் வேலடிதம்பம், வேம்பனி உள்ளிட்ட கிராமங்கள் பயன்பெற்று வந்தது.
இந்நிலையில் கிணற்றை சுற்றி அமைக்கப்பட்டிருந்த சுவர் திடீரென இடிந்து கிணற்றுக்குள் விழுந்தது. இதனால் அச்சமடைந்த கிராம மக்கள் வேலி அமைத்து தடுப்புகளை ஏற்படுத்தினர். மேலும் கிணற்றை சுற்றிலும் பாதுகாப்பான முறையில் சுவர் எழுப்ப வேண்டுமென அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.