மதுரையில் பட்டாசு வெடிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் 4 குழந்தைகளுக்கு கண் பார்வை பறிபோனதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், தீபாவளியன்று பட்டாசு வெடித்ததில் 10க்கும் மேற்பட்டோருக்கு கருவிழியில் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அதில் 4 குழந்தைகளுக்கு முற்றிலும் கண் பாதிப்பு ஏற்பட்டு கண்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.