கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றபோது அதிகாரிகள் செல்போன் பேசிக்கொண்டு அலட்சியத்துடன் செயல்பட்டனர்.
கடலூரில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.
அப்போது அங்கு பணியில் இருந்த அதிகாரிகள் அலட்சியத்துடன் செல்போன் உபயோகித்துக் கொண்டிருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.