தமிழகத்தில் பிரிவினைவாத அரசியலை கையிலெடுத்து தமிழ் மக்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும், தெலுங்கு தமிழர்களின் மனதை புண்படுத்தும் வகையிலும், கருத்துக்களை தெரிவிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் தெரிவித்துள்ளார்.
நடிகை கஸ்தூரியின் சர்ச்சை பேச்சை கண்டித்து பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழர்களின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், சமத்துவத்தையும், சகோதரத்தையும், அமைதியையும் சீர்குலைக்கும் வகையில், விளம்பர அரசியலுக்காக ஒரு சில இயக்கங்களும், தனி நபர்களும் வரலாற்றுக்கு புறம்பாக சித்தரித்து பேசுவது அதிகமாகி வருவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிரிவினைவாத அரசியலை கையிலெடுத்து தமிழ் மக்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும், தெலுங்கு தமிழர்களின் மனதை புண்படுத்தும் வகையிலும் கருத்துக்களை தெரிவிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.