கனடாவில் இந்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென பாஜக எம்.பி. ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தினார்.
கனடாவின் பிராம்ப்டன் நகரில் கோயிலில் வழிபாடு நடத்திய இந்துக்கள் மீது கும்பல் தாக்குதல் நடத்தியது சலசலப்பை ஏற்படுத்தியது.
பீகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்.பி. ரவிசங்கர் பிரசாத், இந்துக்கள் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்தார்.
சனாதன இந்துவாக தாங்கள் அன்பை விரும்புவதாக கூறிய அவர், வழிபாடு நடத்த ஒவ்வொருவருக்கும் உரிமை இருப்பதாக குறிப்பிட்டார்.