சென்னை மயிலாப்பூரில் சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகளிடம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆசி பெற்றார்.
ஸ்ரீ ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட சிருங்கேரி மடத்தின் கிளை சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ளது.
இந்நிலையில் மடத்திற்கு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகளிடம் ஆசி பெற்றார். தொடர்ந்து ஆளுநருக்கு மடத்தின் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. பின்னர் தமிழக மக்கள் அமைதி மற்றும் வளம் பெற வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டார்.