உலகப் புகழ் பெற்ற திருப்பதி திருமலையில் போதைப் பொருட்களை தடுக்கும் வகையில், சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி திருமலையில் மது, மாமிசம் மற்றும் புகையிலை உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யவும் பயன்படுத்தவும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால், தடை செய்யப்பட்ட பொருட்களை மலைமேல் கொண்டு செல்லாமல் தடுக்கும் வகையில், மலை அடிவாரத்தில் உள்ள சோதனை சாவடியில் ஊழியர்கள் சோதனை செய்த பின்னரே பக்தர்கள் அனுப்பி வைக்கின்றனர்.
ஆனாலும், மலைப்பாதை ஓரத்தில் காலியான குட்கா பாக்கெட்டுகள், மது பாட்டில்கள் ஆங்காங்கே சிதறி கிடப்பதாக பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.
எனவே, சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், மது மற்றும் புகையிலை உள்ளிட்ட பொருட்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.