சென்னை புறநகர் பகுதியான பெருங்களத்தூரில் சாலையில் சென்ற காரை காவலர் திடிரென வழிமறித்ததால், விபத்து ஏற்பட்டது.
பெருங்களத்தூர் மேம்பாலத்தில், வண்டலூர் நோக்கி சென்ற காரை சோதனை செய்வதற்காக போக்குவரத்து காவலர் வழிமறித்துள்ளார். அப்போது ஓட்டுநர் பிரேக் பிடித்ததால் பின்னால் வந்த மற்றொரு கார் மோதி விபத்து ஏற்பட்டது.
இது குறித்த வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சாலைகளில் தடுப்புகள் அமைக்காமல் சோதனை செய்வதை போலீசார் நிறுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.