உழைத்து சேர்த்த சொத்தை ஏமாற்றி பறித்துக் கொண்ட மகன்கள் மீது உரிய நவடிக்கை எடுக்கவேண்டும் என வயதான தம்பதிகள் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
வேப்பூர் அருகே உள்ள மாளிகைமேடு கிராமத்தைச் சேர்ந்த 88 வயதான கருப்பன் – பாப்பா தம்பதிக்கு 2 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், தம்மையும், தனது மனைவியையும் நன்றாக பார்த்துக் கொள்வதாகவும், பராமரிப்பதாகவும் ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி 155 சென்ட் நிலத்தை பறித்துக் கொண்டதோடு, வீட்டை விட்டு துரத்திவிட்டதாக தனது 2 மகன்கள் மீது அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.