இன்றைய வர்த்தக நேர முடிவில் இந்திய பங்குச்சந்தைகள் உச்சத்துடன் நிறைவடைந்தன.
ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய வர்த்தக நேர முடிவில் உச்சத்தில் நிறைவடைந்தன.
அதன்படி மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 694 புள்ளிகள் உயர்ந்து 79 ஆயிரத்து 476 புள்ளிகளாக வர்த்தகமானது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 217 புள்ளிகள் உயர்ந்து 24 ஆயிரத்து 213 புள்ளிகளாக உச்சத்துடன் நிறைவடைந்தன.