சென்னை அடுத்துள்ள தாம்பரம் புத்தேரியில் மீன்கள் செத்து மிதப்பதகாவும், இதனால், சுகாதார கேடு ஏற்படும் முன்பு அதிகாரிகள் அதனை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரங்கநாதபுரம் பகுதியில் 65 ஏக்கர் பரப்பளவு கொண்ட புத்தேரியில், ஜிலேபி, விரால் மற்றும் கெண்டை உள்ளிட்ட மீன்கள் திடீரென செத்து மிதப்பதால், கடும் துர்நாற்றம் வீசி வருவதாக புகார் தெரிவித்துள்ளனர். எனவே, ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் எனவும், ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.