நாகை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிக்கல் சிங்காரவேலர் கோயில் திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
சிங்காரவேலர் கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 1 -ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருதேரோட்டம் இன்று காலை தொடங்கியது. முன்னதாக வள்ளி, தெய்வானையுடன் திருதேரில் எழுந்தருளிய முருக பெருமானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு, விழாவின் சிகர நிகழ்ச்சியான வேல் நெடுங்கன்னி அம்மனிடம், சிங்காரவேலவர் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும், பின்னர், சிங்கார வேலவருக்கு வியர்வை சிந்தும் அதிசய நிகழ்வும் நடைபெறவிருக்கிறது.