புதுச்சேரியில் அரசுக்கு சொந்தமான அங்கன்வாடி மைய இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தேவாலயத்தை, அகற்ற வலியுறுத்தி இந்து முன்னணியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியார் நகர் பகுதியில் அரசுக்கு சொந்தமான அங்கன்வாடி மைய இடத்தை ஆக்கிரமித்து கிறிஸ்துவர்கள் தேவலாயம் கட்டயுள்ளனர்.
இந்நிலையில் தேவாலயத்தை அகற்ற வேண்டுமென்றும், அதற்கு ஆதரவாக செயல்படும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இந்து முன்னணியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.