வங்கதேசத்தின் சிட்டகாங்கில் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போராட்டம் நடத்திய இந்துக்கள் மீது அந்நாட்டு ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜமாத் இ இஸ்லாமி அமைப்பைச் சேர்ந்த உஸ்மான் அலி என்பவர் அவதூறு கருத்து பதிவிட்டதைக் கண்டித்து கடந்த 5ம் தேதி உஸ்மான் அலியின் கடை முன்பு இந்து சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களை பாதுகாப்பு படையினர் ஓட ஓட விரட்டி தாக்கினர். இதுதொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
கலவரம் தொடர்பாக 582 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்துககள் மீதான தாக்குதலுக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.