சூரசம்ஹார நிகழ்வில் கந்தனை வணங்குவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், ஓம் கருணைக் கடலே கந்தா போற்றி..! தமிழ்க் கடவுள் ஆறுமுகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில், தீயவை அழித்து நன்மையை விதைக்கின்ற விதமாக இன்று நடைபெறுகின்ற சூரசம்ஹார நிகழ்வைப் போற்றி, வேலுண்டு வினையில்லை என்றபடி கந்தனை வணங்குவோம்..! வெற்றிவேல்..! வீரவேல்..! என எல்.முருகன் கூறியுள்ளார்.