திமுக ஆட்சியில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ராணிப்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
கள்ளக்குறிச்சியில் சமீபத்தில் நடத்திய மது ஒழிப்பு மாநாடு ஒரு நாடாகம். தமிழ்நாடு இன்னைக்கு குடிகார நாடாக, கஞ்சா நாடாக, கொலைகார நாடாக மாறியுள்ளது. அமெரிக்காவில் கிடைக்கும் போதைப்பொருட்கள் தமிழகத்திலும் கிடைப்பதாக தெரிவித்தார்.
2026 – ல் நிச்சயமாக திமுக ஆட்சிக்கு வராது. திமுக கூட்டணியில் யார் வெளியே செல்வார்கள் என அச்சமுடன் உள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டில் 5 ஆயிரம் கொலைகள், 50 ஆயிரம் கொள்ளைகள் நடந்துள்ளது. 20 விசாரணை கைதிகள் உயிரிழந்துள்ளனர் என அன்புமணி தெரிவித்தார்.