திருப்பரங்குன்றம் கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி, சட்டத் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
மதுரை அடுத்துள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 2 -ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, விழாவின் சிகர நிகழ்ச்சியாக சட்ட திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, உற்சவர் சன்னதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க, சர்வ அலங்காரத்தில் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளியபடி சட்டத் தேரை அடைந்தார்.
அப்போது, அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் அரோகரா என பக்தி கோஷத்துடன், திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.