இந்துக்களை தாக்கிய காலிஸ்தான் பயங்கரவாதிகளை கண்டித்து, சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்ட நிலையில், ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
கனடாவில் பிராம்டன் பகுதியில் உள்ள இந்து கோயில் மற்றும் பக்தர்கள் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனைதொடர்ந்து அர்ஜுன் சம்பத் மற்றும் இந்து மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத், தமிழக காவல்துறை வேண்டுமென்று தங்கள் மீது வழக்கு தொடர்ந்து அலைக்கழித்ததாக குற்றம் சாட்டினார்.