மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழா மங்கல இசை வாத்தியங்களுடன் கோலாகலமாக தொடங்கியது.
தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழன் ஐப்பசி மாத சதய நட்சத்திரத்தில் பிறந்ததாகவும், அதே நட்சத்திரத்தில் மன்னராக முடிசூடியதாகவும் நம்பப்படுகிறது.
எனவே ராஜராஜ சோழனின் பிறந்த நாளையும், முடிசூட்டு நாளையும் பொதுமக்கள் ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ராஜராஜ சோழனின் 1039ம் ஆண்டு சதய விழா மங்கல இசை வாத்தியங்களுடன் கோலாகலமாக தொடங்கியது.
இந்நிகழ்வையொட்டி பழங்கால இசைக்கருவிகளோடு ஆயிரத்து 39 நடன கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடர்ந்து நிகழ்ச்சியின் 2ம் நாளில் ராஜராஜ சோழன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர்.