தென்காசி மாவட்டம் குலசேகரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவரை தகுதிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
குலசேகரப்பட்டி ஊராட்சிமன்ற தலைவராக திமுகவை சேர்ந்த முத்துமாலையம்மாள் பதவி வகித்து வந்தார். இவர் ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு அரசுக்கு நிதி இழப்பீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ஊராட்சி மன்ற தலைவர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என தெரியவந்தது.
இதையடுத்து முத்து மாலையம்மாளை ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து நீக்கி தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் உத்தரவிட்டார். இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆவுடையனூர் அதிமுக ஊராட்சி மன்ற தலைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.