பீகார் மாநிலம் பரவுனி ரயில் நிலையத்தில் என்ஜினுடன் ரயில் பெட்டிகளை இணைக்கும் பணியின்போது எதிர்பாராத விதமாக ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
பீகார் மாநிலம், பரவுனி ரயில் நிலையத்தில் லக்னோ – பரவுனி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளை என்ஜினுடன் இணைக்கும் பணியில் ரயில்வே ஊழியர் அமர் குமார் ராவ்
என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது இரு ரயில் பெட்டிகளுக்கு இடையே எதிர்பாராத விதமாக சிக்கி உடல் நசுங்கி அவர் உயிரிழந்தார்.
லோகோ பைலட் என்ஜினை முன்னோக்கி இயக்குவதற்கு பதிலாக பின்னோக்கி இயக்கியதால் இந்த விபரீதம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. சுற்றி இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டதும் லோகோ பைலட் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். முதற்கட்ட விசாரணையில் ரயில்வே ஊழியர்களுக்கு இடையேயான தகவல் தொடர்பு குறைபாடே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.