மறுசீரமைப்பு பணிகளுக்காக மதுரை ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
மதுரையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ரயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் நவம்பர் 11ம் தேதி முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலாக பயண சீட்டு அலுவலகம் அருகே தற்காலிக நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் வசதிக்காக அங்கு வழிகாட்டு விளம்பரங்களும், பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.