கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள எஸ்.நரையூர் கிராமத்தில் பழமைவாய்ந்த சிவன் கோயிலை புதுப்பிக்க முடிவு செய்த அப்பகுதி மக்கள் முட் புதர்களை அகற்றியுள்ளனர். அப்போது கோயில் சுவரில் உள்ள கருங்கல்லில் எழுத்துகள் இருந்ததை பார்த்து விழுப்புரம் வரலாற்று கல்வெட்டு மற்றும் ஆராய்ச்சி அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் சென்று ஆய்வு செய்தபோது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் காலத்தில் பயன்படுத்திய கல்வெட்டு என தெரியவந்தது. இதுதொடர்பாக தொடர் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.