கடலூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 6 பெண்கள் உள்பட 11 பேருக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்திருந்தனர்.
அதில் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 78 பேருக்கு ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 5 ஆண்கள், 6 பெண்கள் உள்ளிட்ட 11 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் அந்த 11 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள டெங்கு காய்ச்சலுக்கான தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.