காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா நடைபெற்றது. இதனை கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்தி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இதில் காஞ்சிபுரம் மாவட்ட அளவில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்.
சுமார் 80 கலைப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இதில் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவியர் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.