நாமக்கல்லில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த 216 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர்கள் தங்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 754 ரூபாயை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதனால் தூய்மைப் பணிகள் தேக்கமடைந்ததால், மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.
















