கன்னியாகுமரியில் பாம்பு கடித்து சிகிச்சை பெற்றுவந்த பாஜக நிர்வாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ராஜாக்கமங்கலம் பாஜக கிழக்கு ஒன்றிய செயலாளராக பவித்ரா பதவி வகித்து வந்தார்.
இவரை பாம்பு கடித்த நிலையில், ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி பவித்ரா பரிதாபமாக உயிரிழந்தார்.