வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக 3 ஆயிரத்து 159 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகையாற்றில் நடைபெறும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மதுரையின் அடையாளமாக திகழ்ந்துவரும் பழமை வாய்ந்த ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் அருகே கோரிப்பாளையம் பகுதியில் இருந்து நெல்பேட்டை பகுதி வரை மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலத்துக்கான கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 159 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.
இதன் காரணமாக வைகையாற்றில் நீர் ஆர்ப்பரித்து செல்வதால் பாலம் கட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.