ஸ்பெயின் நாட்டின் வலேன்சியா நகரில் மேகவெடிப்பு காரணமாக பெய்த கனமழைக்கு 220-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
வலேன்சியா நகரில் மேகவெடிப்பால் கடந்த இரண்டு வாரமாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 220-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் வீடுகளை இழந்து முகாமில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனிடையே, ஸ்பெயினில் வெள்ள மீட்பு நடவடிக்கையாக 50 பேர் குழுவை பிரான்ஸ் அனுப்பிவைத்தது.
வலேன்சியாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தவறியதாக அதிகாரிகளையும் ஆளும் அரசையும் கண்டித்து 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஸ்பெயின் அரசைக் கண்டித்து அவர்கள் தீயைக் கொளுத்தி போட்டதால், பதற்றம் நிலவியது.