கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது..
சபரிமலை ஐயப்பன் கோயிலில், மண்டல கால பூஜை நாளை மறுநாள் தொடங்குகிறது. இதை முன்னிட்டு, நாளை மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. தந்திரிகள் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறக்க உள்ளார்.
பின்னர், சபரிமலை கோயில் மேல்சாந்தியாக கொல்லம் அருண்குமார் நம்பூதிரியும், மாளிகைப்புரம் மேல்சாந்தியாக கோழிக்கோடு வாசுதேவன் நம்பூதிரியும் பொறுப்பேற்பார்கள்.
அதைத்தொடர்ந்து நாளை இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். பின்னர், கார்த்திகை 1-ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு மீண்டும் கோயில் நடை திறக்கப்படும். ஆன்லைன் முறையில் தினசரி 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்கிங் முறையில் 10 ஆயிரம் பேர் வரையிலும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதனிடையே, பம்பை ஹில்டாப் மற்றும் சக்குபாலம் ஆகிய இடங்களில் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.