எலான் மஸ்க்கின் எக்ஸ் சமூக வலைதளம் நச்சு நிறைந்தது எனக் குற்றம் சாட்டிய பிரிட்டனைச் சேர்ந்த மிகப் பழமையான நாளிதழான தி கார்டியன், எக்ஸ் தளத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எக்ஸ் தளத்தை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளை விட எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ் தளத்தில் உள்ள தகவல்கள் இனவெறி கோட்பாடுகளை கொண்டதாக உள்ளதாகவும், அமெரிக்க தேர்தலை எக்ஸ் தளம் கையாண்ட விதம் அதனை உறுதிப்படுத்துகிறது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நாளிதழுக்கு ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் 80 கணக்குகள் உள்ளன. இவற்றை 27 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதே போல் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பின்னர் எக்ஸ் வலைதளத்தை விட்டு ஒரு லட்சத்து 15 ஆயிரம் பயனர்கள் விலகியுள்ளனர்.