அதிகரிக்கும் வேலையின்மை : சீனாவில் ட்ரண்ட் ஆகும் IRON BUTT பயணங்கள் - சிறப்பு கட்டுரை!
Jul 3, 2025, 09:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிகரிக்கும் வேலையின்மை : சீனாவில் ட்ரண்ட் ஆகும் IRON BUTT பயணங்கள் – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Nov 14, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவில் IRON BUTT பயணம் என்ற புதிய டிரெண்ட் இளைஞர்கள் மத்தியில் வேகமாக பிரபலமடைந்து வருகிறது. வேலைவாய்ப்பின்மை மற்றும் குறைந்த வருமானம் காரணமாக, பணத்தை மிச்சப்படுத்த பலர் நீண்டதூர பேருந்து மற்றும் ரயில் பயணங்களைத் தேர்வு செய்கிறார்கள். இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

IRON BUTT என்பது பேருந்து அல்லது ரயில்களில் அதிக நேரம் சோர்வடையாமல் அமர்ந்திருப்பவர்களை குறிக்கும் ஒரு வேடிக்கையான சொல்லாட்சியாகும்.

நிரந்தர வேலைவாய்ப்பின்மை சீனாவில் அதிகரித்து வருகிறது.வேலையில்லாத அல்லது குறைந்த சம்பளத்துக்கு வேலை பார்க்கும் சீன இளைஞர்கள் தங்கள் பயணத்துக்கு மலிவான வழிகளையே தேர்ந்தெடுக்கிறார்கள்.

அதிகம் கட்டணத்தை கொண்ட விமான பயணங்களை தவிர்த்துவிட்டு, பேருந்து அல்லது ரயிலில் பயணம் செய்யும் போது, தாங்கள் கடந்து செல்லும் இடங்களைப் பார்த்து அதன் பாரம்பரியதையும்,வரலாறுகளையும் அறிந்து கொள்ள முடிகிறது என்றும் சீன IRON BUTT இளைஞர்கள் உற்சாகமாக சொல்லி வருகின்றனர்.

பொதுவாக சில நேரங்களில் ரயில் அல்லது பேருந்து பயண நேரம், குறைந்த பட்சம் 50 மணி நேரத்துக்கும் மேலாக உள்ளன. அதனால், முதுகுவலி மற்றும் உடல் அசௌகரியம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

இந்நிலையில் தான், சீன சமூக ஊடகங்களில் #ironbutttravel என்ற ஹேஷ்டேக் டிரெண்ட்டாகி உள்ளது. இந்த ஹேஷ்டேக்கில் சீன இளைஞர்கள் தங்களின் நீண்ட பேருந்து மற்றும் ரயில் பயணங்கள் பற்றிய சுவாரஸ்யமான கதைகளையும் படங்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.

மாண்டரின் சீன மொழியில் “டைடிங்” என்று அழைக்கப்படும் இந்த போக்கு, அதன் #ironbutttravel ஹேஷ்டேக்குடன் இரண்டு கோடிகளுக்கும் மேலான கிளிக்குகளைப் பெற்றுள்ளது.

குறிப்பாக சீனாவில், பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் போன்ற மாநகரங்களில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல மலிவான பேருந்து மற்றும் ரயில் பயணங்களையே தேர்வு செய்கிறார்கள்.

கடந்த 10 மாதங்களில் 10 முறை இத்தகைய இரும்புப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாக கூறும் 23 வயதான லின், பேருந்துகள் மற்றும் ரயில்களில் சுமார் 300 மணி நேரத்திற்கும் மேலாக பயணம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், சீனாவின் சின்ஜியாங்கில் இருந்து கஜகஸ்தானின் அஸ்தானாவுக்கு இடைவிடாமல், மொத்தம் 46 மணிநேரம் பேருந்தில் பயணம் செய்ததாக கூறியுள்ளார்.இந்த iron butt பயணத்தின் போது, உள்ளூர் உணவுகளைச் சுவைக்க முடிகிறது என்றும், புதிய புதிய நண்பர்களைப் பெற முடிகிறது என்றும் சீன இளைஞர்கள் கூறுகிறார்கள்.கொரொனா தொற்று நோய் முடிவுக்கு வந்தபின், உலகெங்கிலும் உள்ள ​​மக்கள் அதிக அளவில் சுற்றுலாவை நோக்கித் திரும்பினர்.

ஸ்லீப் டூரிசம் , டார்க் டூரிசம், ரிவென்ஜ் டூரிசம் என பல வகையான சுற்றுலா போக்குகள் உருவானது. இந்நிலையில், சீனாவில் உள்ள பல்கலை கழக பட்டதாரி இளைஞர்கள், IRON BUTT சுற்றுலாவை உருவாக்கி இருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு செப்டம்பரில், Xinxin என்ற 25 வயதான சீன இளைஞர்,முதன்முறையாக IRON BUTT பயணி’ என்று சீன சமூக ஊடகங்களில் வைரலானார். Xinxin ஓராண்டில், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சுமார் 42 நகரங்களுக்குப் பேருந்திலும் இரயிலிலும் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில், சீனப் பொருளாதாரம் இந்த ஆண்டு இறுதியில் 4.8 சதவீதம் வீழ்ச்சி அடையும் என்று சர்வதேச நிதி ஆணையம் கணித்துள்ளது. தொடர்ந்து, அடுத்த ஆண்டு, சீனாவின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 4.5 சதவீதமாகக் குறையும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இது சீன மக்களைச் செலவழிப்பதில் எச்சரிக்கையாக இருக்கும்படி கட்டாயப்படுத்துகின்றன. எனவே IRON BUTT பயணங்கள் சீனாவில் பிரபலமாகி வருகிறது.

Tags: chinaIRON BUTT travelunemployment issuelow incomelong distance bus and train journeysPermanent unemployment
ShareTweetSendShare
Previous Post

எம். பி – எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை முன்னுரிமை வழங்கி விசாரிக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்

Next Post

கன்னியாகுமரி பார்த்திபபுரம் பார்த்தசாரதி கோயில் ஐம்பொன் சிலைகள் திருட்டு – போலீஸ் விசாரணை!

Related News

அடுத்த தலாய் லாமா யார்? : சீனாவின் எதிர்ப்பால் எழுந்த புதிய சர்ச்சை!

மாத்தி யோசித்ததால் வெற்றி : டிராகன் பழம் பயிரிட்டு லாபத்தை குவிக்கும் விவசாயி!

குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?

சிறுவாணி அணையில் கசிவு? : நிதி ஒதுக்கி அணையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 3 கேள்விகள்!

Load More

அண்மைச் செய்திகள்

அமைதி காக்கும் நடிகர்கள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

ரஷ்யா அதிரடி தாக்குதல் – உரியப் பதிலடி கொடுக்க முடியாமல் உக்ரைன் திணறல்!

ஆப்பிரிக்க கண்டத்தின் நம்பிக்கை ஒளி கானா : பிரதமர் மோடி புகழாரம்!

போஷான் அபியான் திட்டத்துக்கு வழங்கும் நிதி எல்லாம் எங்கே செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்சார துறை ஊழியர்கள் போராட்டம்!

வியட்நாம் : கட்டிடம் மீது மின்னல் தாக்கிய காட்சி!

லாக்கப் மரணங்களுக்கு 2026 தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர் – ஜெயக்குமார் திட்டவட்டம்!

இஸ்ரேல் தாக்கிய வீடியோவை வெளியிட்ட ஈரான்!

அஜித்குமார் மரணம் : 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!

பாக். எல்லையில் நிறுத்தப்பட உள்ள அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies