புதுச்சேரியில் சுயேச்சை எம்எல்ஏ-வை மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை எதிரே உள்ள நகராட்சிக்கு சொந்தமான கடைகளை ரவுடி ராமு ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக புதுச்சேரி பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏவும், வணிக சங்கங்களின் தலைவருமான சிவசங்கரன் அளித்த புகாரின்பேரில், ரெட்டியார்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்த ராமுவுக்கு நீதிபதி முன்ஜாமீன் தர மறுத்ததார். இதையடுத்து தப்பியோடிய அவரை விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.