இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி 123 இடங்களில் முன்னிலை பெற்று, பெரும்பான்மைக்கு தேவையானதை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மொத்தம் 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் அனுரா குமாராவின் தேசிய மக்கள் சக்தி கட்சி, முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் புதிய ஜனநாயக முன்னணி, முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் பொதுஜன முன்னணி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.
அதேபோல, தமிழர் கட்சிகளும் தனித்தனியே களம் கண்டன. வாக்குப்பதிவு முடிந்த கையோடு, வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவைப்படும் பட்சத்தில், தேசிய மக்கள் சக்தி கூட்டணி 123 இடங்களில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றுள்ளது.
சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 31 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 6 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி கட்சி 61 புள்ளி 73 சதவீத வாக்குகளும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 17 புள்ளி 74 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன. இதன் மூலம் தேசிய மக்கள் சக்தி கட்சி பெரும்பான்மையை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.