பித்தப்பை கல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளைஞர் விக்னேஷுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கிண்டி அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கருணாநிதி நூற்றாண்டு அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சையை தொடர முடியாத நிலையில், இளைஞர் விக்னேஷ் தீவிரமான நிலையிலேயே அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
விக்னேஷ் அழைத்து வரப்பட்டபோது அனைத்து உள்நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவர்கள் பணியில் இருந்ததாகவும்,
குடல் நோய் வார்டில் விக்னேஷ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து விக்னேஷ், அவசர பிரிவுக்கு மாற்றப்பட்டு, செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து விட்டதாகவும்,
உயிரிழந்த விக்னேஷுக்கு அனைத்து முறையான சிகிச்சைகளும் கொடுக்கப்பட்டதாகவும் மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.