அரசு பேருந்துகளில் பயணிக்க இனி 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
அரசு பேருந்துகளில் பயணிக்க 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் நடைமுறையில் மாற்றம் கொண்டுவர அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திட்டமிடப்பட்டது.
இதுகுறித்து பயணிகளிடம் பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் நீண்ட காலத்திற்கு முன்னரே, பயண திட்டமிடல் செய்வதற்கு ஏதுவாக 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை இன்று பகல் 12 மணி முதல் அமலுக்கு வரவுள்ளதாக தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.