திருச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற திருச்செந்தூறை சந்திரசேகர சுவாமி கோயிலில் மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே சுவாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூறை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள், வக்பு வாரிய இடத்திற்கு சொந்தமானதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில், அப்பகுதி பொதுமக்கள் நிலத்தை விற்கவோ, வாங்கவோ முடியாத சூழல் ஏற்பட்டது.
இதனையடுத்து வக்பு வாரிய சொத்துக்கள் குறித்த ஒரு சட்டத் திருத்தம், இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் வக்பு வாரிய சர்ச்சைக்குள்ளான திருச்செந்தூறை சந்திரசேகர சுவாமி கோயிலில் மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே சுவாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக கோயிலுக்கு வருகைதந்த அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.