மதத்தின் அடிப்படையில் பொதுமக்களை காங்கிரஸ் கூட்டணி பிளவுபடுத்துவதாக பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா குற்றம்சாட்டினார்.
மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலையொட்டி, நவிமும்பையில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிகார பேராசையில் காங்கிரஸின் மகா விகாஸ் அகாடி கூட்டணி திட்டம் வகுப்பதாகவும், மக்களை பிளவுபடுத்தும் அரசியலில் அவர்கள் ஈடுபடுவதாகவும் ஜெ.பி. நட்டா விமர்சித்தார்.
மேலும் அம்பேத்கர் வகுத்த அரசியலமைப்பு சட்டத்தில் நம்பிக்கை இல்லாத காங்கிரஸ், ஒருசாராரை திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபடுவதாக அவர் குற்றம்சாட்டினார்.
மத அடிப்படையில் இடஒதுக்கீடு கோருவதன் மூலம் பொதுமக்களை காங்கிரஸ் கூட்டணி பிளவுபடுத்துவதாகவும் ஜெ.பி. நட்டா விமர்சித்தார்.