மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அனில் தேஷ்முக் கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.
நாளை தேர்தல் நடைபெறும் மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. முன்னதாக நாக்பூரில் கடோல் சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஜலகேடா சாலையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் சரத் சந்திர சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அனில் தேஷ்முக், தன் மகனும், கட்சி வேட்பாளருமான சலீல் தேஷ்முக்கை ஆதரித்து இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது மர்ம நபர்கள், தேஷ்முக் கார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த தேஷ்முக், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.