ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த நிலையில், 2வது நாளாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை காரணமாக சேலம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் செல்லம் என்ற பெண் அனுமதிக்கப்பட்டார்.
ரத்தப்போக்கு அதிகரித்ததால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, உடல் பரிசோதனை செய்யாமல் அறுவை சிகிச்சை மேற்கொண்டதே உயிரிழப்புக்கு காரணம் எனக்கூறி 2வது நாளாக பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.